Friday, 6 January 2017

ஜெயலலிதா மரணம் கழக முழக்கங்கள்


 
ஜெயலலிதா மறைந்தார் !
ஜெயாவின் ``மாஃபியா சசி கும்பலின்`` ஆட்சி தொடர்கிறது!
 
 உச்ச நீதிமன்றமே,
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை உடனே வழங்கு!
 
மோடி அரசே ராம் மோகன்ராவ் ரெட்டி,ஓ. பி.எஸ்,
சசி கும்பல் மீது நடவடிக்கை எடு!
 
அ தி மு க அரசை கைப்பாவையாக மாற்றுவதற்கான மோடி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
 
தமிழக அரசே ஜெயலலிதா மரணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடு!
 
தகுதியற்ற சசிகலாவை ஆட்சியில் அமர அனுமதியோம்!

 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு      
ஜனவரி - 2017

Thursday, 5 January 2017

வாழ்வை மாய்க்கும் விவசாயிகளுக்கு வாழப் போராட கழகம் அறைகூவல்!


மோடி ஆட்சியில் , வேளாண்மை நெருக்கடியும், விவசாயிகள் தற்கொலையும் பெருகுகிறது.
 
மோடி அரசின் கார்பப்ரேட் வேளான் கொள்கைகள், மானிய வெட்டு , வேளான் பொருட்களின் விலை வீழ்ச்சி, அரசு கொள் முதல் கைவிடலை எதிர்த்துப் போராடுவோம்!
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடுவோம்!
 
விவசாயிகளின் கடன்களை இரத்து செய், வங்கி கடன் வழங்கு , வறட்சி நிவாரணம் வழங்கு!
 
விவசாயிகளே மாண்டது போதும் , மோடி ஆட்சியை வீழ்த்த சூளுரைப்போம்.மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு      
ஜனவரி - 2017
 

Monday, 26 December 2016

தர்மபுரி: செல்லாக்காசு மோடி எதிர்ப்பு கழக ஆர்ப்பாட்டக் காட்சிகள்


 
      நன்றி
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் - PDYA
 
Report / Photos                                                                                                                        S.Rajan

Monday, 19 December 2016

கறுப்புப் பணக் காவலன் மோடியே `செல்லாக் காசு` உத்தரவை ரத்துச் செய்!அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயகவாதிகளே!

கறுப்புப் பண ஒழிப்பு, கள்ளப்பணக் களையெடுப்பு, தீவிரவாதப் பண முறியடிப்பு, ஊழல் வேரறுப்பு என்று கூறி மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி ரூ. 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. அதையும் எதேச்சதிகார முறையிலேயே அறிவித்தது. கறுப்புப் பணக்காரர்கள் மீது குறிவைத்து “சர்ஜிகல் தாக்குதல்” நடத்தப் போவதாக அறிவித்துவிட்டு, ரூ. 500, 1000 நோட்டுகளைச் செல்லாததாக்கி, 86 சதவீதப் பணப் புழக்கத்தைத் தடைசெய்து மாற்று நோட்டுகளைப் புழக்கத்தில் விடாமல், மோடி கும்பல் பரந்துபட்ட மக்கள் மீது “கார்ப்பெட் பாம்” தாக்குதலை நடத்தியுள்ளது.

மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையாலும், பணப்புழக்கம் குறைந்ததாலும் நாடு முழுக்க பொது மக்கள் அத்தியாவசியச் செலவுக்கே பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். பணத்துக்காக
ஏ.டி.எம்.களில் வரிசையில் நின்று நாட்டு மக்கள் மாண்டு வருகின்றனர். இதுவரை 90 பேருக்கு மேல் மாண்டுவிட்டனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மட்டும் 55,000 திருமணங்கள் நின்றுவிட்டன.

மேலும் சிறு, குறு தொழில்கள் முதல் - நடைபாதைக் கடைகள் வரை சீரழிந்து விட்டது; நடுத்தர வர்க்கம் முதல் - அன்றாடங் காய்ச்சிகள் வரை நாட்டின் பெரும்பகுதி மக்களை வாட்டி வதைப்பதுடன், நாட்டின்
பொருளாதாரத்தை முடக்கிப்போட்டுவிட்டது.

மோடியின் செல்லாக்காசு அறிவிப்பு உண்மையில் கறுப்புப் பணத்தை ஒழிக்காது. ஏனெனில், மொத்தக் கறுப்புப் பணத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே நோட்டுகளாக உள்ளன. 90-சதவீத கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் டாலர்களாகவும், வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் பங்குச்சந்தை முதலீடுகளாகவும், ரியல் எஸ்டேட்டில் சொத்துகளாகவும். தங்கமாகவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 120-லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையையும் மோடி எடுக்கத் தயாரில்லை. மோடியின் செல்லாக்காசு அறிவிப்பு இத்தகைய கறுப்புப் பணத்தின் மீது எள் முனை அளவுகூடத் தாக்குதல் நடத்தவில்லை.

மேலும், மோடியின் கார்ப்பரேட் நண்பர்களான அதானி, அம்பானி போன்றவர்களுக்கும், பி.ஜே.பி.யினருக்கும் மோடியின் இந்த அறிவிப்பு முன்கூட்டியே சொல்லப்பட்டுத் தப்பித்துக் கொண்டனர். சிலர் தங்களிடம் உள்ள கறுப்புப் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்தும், கமிஷன் கொடுத்து தரகர்கள் மூலமும் மாற்றிக் கொண்டனர். இந்த வழிகளை நம்பாதவர்கள் பல ஆயிரம் கோடிகளை கோவில் உண்டியலில் கொண்டு கொட்டினர்.

மோடியின் செல்லாக்காசு நடவடிக்கைகளால் ரூ.3-லட்சம் கோடி முதல் ரூ.5-லட்சம் கோடி வரை கறுப்புப் பணம் பிடிபடும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கள நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களைக் காட்டி ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி உண்மை நிலையை உணர்த்துவதாக உள்ளது.

மோடி செல்லாக்காசு நடவடிக்கைகளை நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தபோது, ரிசர்வ் வங்கியிடம் கையிருப்பாக இருந்த ரொக்கத்தின் மதிப்பு ரூ.4.06-லட்சம் கோடி ஆகும். நவம்பர் 28-ஆம் தேதி வரை வங்கிகளில் திருப்பிச் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.8.44 லட்சம் கோடி ஆகும். அதற்குப் பிறகு டிசம்பர் 5-வரை வங்கியில் செலுத்தப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.50,000-கோடி என வைத்துக் கொண்டால் ஒட்டு மொத்தமாகத் திரும்பப் பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 13.5-லட்சம் கோடி ஆகும்.

ரிசர்வ் வங்கியால் ஒட்டுமொத்தமாகப் புழக்கத்தில் விடப்பட்ட அதிக மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44-லட்சம் கோடி என்று நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர்
தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால் வங்கிக்கு வெளியில் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.1.94 லட்சம் கோடிதான். அதிலும் 94 ஆயிரம் கோடி பணம் திரும்பப் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதன் பிறகு வெளியில் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் கோடி மட்டுமே.

தானாக முன்வந்து வருமானத்தைத் தெரிவிக்கும் திட்டத்தின் கீழ் எந்தச் சிரமமும் இன்றி ரூ.65,000-கோடி கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதைவிட சற்று அதிகமான கறுப்புப் பணத்தை மீட்பதற்காக ஏழைகளின் வாழ்வில் மிகப்பெரிய சூறாவளியை ஏற்படுத்தியது சரியா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க மோடி கும்பல் தயாரில்லை. ரூபாய் மதிப்பு செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு ஏற்பட்ட வணிகம், உற்பத்தி இழப்புடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவாகும்.

மேலும், செல்லாக்காசு அறிவிப்பால் கள்ளப்பணத்தை ஒழிப்பது என்ற கூற்றும் பொய்த்துவிட்டது. தரம் குறைந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்த அன்றே எளிமையாக கள்ள நோட்டை அடித்து
வெளியிட்டுவிட்டனர். கள்ளநோட்டு அடிப்பதற்கு வசதியாகவே மோடி வெளியிட்ட நோட்டுக்கள் இருக்கின்றன, அத்துடன் இந்தியாவில் கள்ளப்பணம் என்பது 0.22 சதவீதம்தான் என்றும் அதாவது 400 கோடிதான் என்றும் அதனைக் கைப்பற்ற ரூ.1.75 லட்சம் கோடி நாட்டின் பொருளாதாரம் நட்டத்தை சந்திக்கிறது. அதே நேரத்தில் பெரும் பணமுதலைகள் இதிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள் என்பதும் கண்கூடு. இவ்வாறு மோடியின் செல்லாக்காசு நடவடிக்கை படுதோல்வி அடைந்துவிட்டது. பொருளாதாரம் சீரழிந்து மக்களோ சொல்லொண்ணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால், மோடி அரசாங்கம் தனது தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. தோல்விகளை ஒப்புக்கொள்ளவும் தயாரில்லை. மக்களின் துயரங்களைப் போக்கவும் மனமில்லை. மாறாக, தடைசெய்யப்பட்ட நோட்டுகளுக்கு மாற்றாக போதுமான நோட்டுகளை வழங்க மறுத்து, ‘டிஜிட்டல் மனி’ (Digital Money) என்றும், ‘பணமில்லாப் பொருளாதாரத்திற்கு’ (Cashless Ecconomy) மாறவேண்டும் என்றும் பேசி, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கிறது. 500, 1000-ரூபாய் நோட்டுகளுக்குத் தடை விதித்து, பணமில்லாத பொருளாதாரம் என்ற பேரில் புதிய காலனியத்திற்குச் சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்தி சிறு, குறு தொழில்களையும் சில்லறை வணிகத்தையும் அழித்து பன்னாட்டு கம்பெனிகளின் வேட்டைக்காடாக நாட்டை மாற்றும் துரோகத்தை வெளிப்படையாகவே செயல்படுத்துகிறது. மோடி கும்பலின் செல்லாக்காசு அறிவிப்பின் உண்மையான நோக்கமும் அதுவே.

இத்தகைய சூழலில் நாட்டையும் நாட்டு மக்களையும் சீரழிக்கும் கறுப்புப் பணத்தை ஒழிப்பது எப்படி?

நாட்டை பொருளாதாரச் சீரழிவுகளிலிருந்து மீட்பது எப்படி என்பதை விரிவாகப் பரிசீலனை செய்வோம்.

கறுப்புப் பணம் என்பது என்ன?

கறுப்புப் பணம் என்று சொல்லும்போது தலையணை உறைக்குள்ளோ அல்லது மண்ணுக்கு அடியில் பெட்டிக்குள்ளோ பதுக்கப்பட்டிருக்கும் கத்தைக் கத்தையான நோட்டுகள்தான் என்று கருதி மோடி எடுக்கும் நடவடிக்கைகள் அபத்தமானதாகும்.

“கறுப்புப் பணம் என்று நாம் சொல்லும்போது கள்ளக் கடத்தல், போதை மருந்து விற்பனை மற்றும் வரி ஏய்ப்பு போன்ற சட்டவிரோதச் செயல்பாடுகளையே குறிக்கிறோம். ‘கறுப்புப் பணம்’ என்பது ஒரு இருப்பைக் குறிப்பதல்ல, ஓட்டத்தைக் குறிப்பது என்பதுதான் இதன் பொருள். ‘கறுப்புச் செயல்பாடுகள்’ அவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபத்தைத் தருபவை; பணத்தைக் குவித்து வைத்திருப்பது லாபம் தராது. வர்த்தகச் செயல்பாடுகள் என்பதற்கு மார்க்ஸ் சொல்லியிருப்பது ‘கறுப்புச் செயல்பாடுகளுக்கும்’ பொருந்தும்; அதாவது, பணத்தை சுற்றில் விடுவதால்தான் லாபம் ஈட்ட முடியுமேயழிய, பதுக்கி வைப்பதினால் அல்ல.

வர்த்தகப் பணம் குறைந்த அல்லது நீண்டகாலத்திற்கு இருப்பாக வைக்கப்படும் என்பது உண்மைதான் (உதாரணமாக, மூலதனம்-பண்டம்-மூலதனம் என்கிற சுழற்சியில்); இது ‘வெள்ளை நடவடிக்கைகளுக்குப்’ (வர்த்தகம்) பொருந்தும் அளவிற்கு ‘கருப்பு நடவடிக்கைகளுக்கும்’ பொருந்தும்.

அதனால்தான், ‘கறுப்புப் பணம்’ இருப்பாக வைக்கப்படும் என்றும், ‘வெள்ளைப் பணம்’ சுற்றில் விடப்படும் என்றும் அவற்றின் தனித்தன்மையை வரையறுப்பதற்கு ஆதாரமே இல்லை. எல்லாப் பணமும் சில இடைவெளிகளுக்குப் பிறகு சுற்றி வருகிறது; ‘கறுப்புச் செயல்பாடாக’ இருந்தாலும் ‘வெள்ளைச் செயல்பாடாக’ இருந்தாலும் இதுதான் உண்மை. சுற்றுக்கு விடப்படாத பணம் செத்து போன பணமேயாகும்.

ஆகவேதான், ‘கறுப்பு பணத்தை’ வெளியே கொண்டுவருவதன் சாரம் ‘கறுப்பு நடவடிக்கைகளைத்’ தேடிக் கண்டுபிடிப்பதில் இருக்கின்றதேயழிய, இருப்பாக வைத்திருக்கும் பணத்தைத் தாக்குவதில் அல்ல” என்ற பிரபாத் பட்நாய்க்கின் கூற்று சரியானாதேயாகும்.

புதிய தாராளக் கொள்கைகளும் கறுப்புப்பணம் குவிதலும்

கறுப்புப் பணம் என்பது ஆளும் வர்க்க அரசாங்கங்களின் அரசியல் பொருளாதார முறைகளிலிருந்து தனித்துச் செயல்படுவதல்ல. அரசாங்கத்திற்கு இணையான சட்ட விரோதமாக கறுப்புப் பணம் பெருகுவது என்பது அரசாங்கத்தைச் சேர்ந்த வரி வசூலிக்கும் அமைப்புகள், இலஞ்ச ஒழிப்பு அமைப்புகள் ஆதரவுடன், உளவு மற்றும் காவல் துறை அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகள், ஆளும் வர்க்க அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான கள்ளக் கூட்டணியின் விளைவேயாகும்.

மிகவும் சரியாகக் குறிப்பிட வேண்டுமானால் கறுப்புப் பணம் என்பது ஊழல் மலிந்த முதலாளித்துவப் பொருளாதார அமைப்பால் உருவாக்கப்படும் ஒருங்கிணைந்த அமைப்பு முறையாகும். 70-ஆம்
ஆண்டுகளிலிருந்தே சட்ட விரோதமாக கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பது தொடர்கிறது எனினும், புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்படுகின்ற கடந்த 25-ஆண்டுகளில் சந்தை சக்திகள் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதற்குத் தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் மொத்தக் கறுப்புப் பணத்தில் 85 சதவீத கறுப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டு வருகின்றன.

புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு அந்நிய முதலீடுகளைக் கவர்வது என்ற பேரில் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்கள் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளும் கைவிடப்பட்டன. பன்னாட்டு கம்பெனிகளும், உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவக் கும்பலும் முதலாளித்துவத்திற்கு முந்தைய முறையில் செல்வங்களைக் கொள்ளையிடுவது எல்லையின்றி அதிகரித்த வண்ணம் உள்ளன. ஹவாலா வர்த்தகத்தின் மூலம் மூலதனத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்குவது (Flight Capital), இயற்கை மற்றும் கனிமவளங்களை சட்டவிரோதமாகக் கொள்ளையிடுதல், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கும் லஞ்ச ஊழல்கள், தொழிலாளர்களின் கூலியைக் குறைத்து மனித உழைப்பைச் சூறையாடுவது போன்ற பல வழிகளில் பல லட்சம் கோடிகள் கறுப்புப் பணமாக நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் வெள்ளையாக இந்தியாவிற்குள் நுழைந்து ஊக வாணிபத்தில் ஈடுபடுகின்றன.

ஹவாலா வர்த்தகம்

பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டுத் தரகுமுதலாளித்துவ நிறுவனங்கள் ஹவாலா வர்த்தகத்தின் மூலம் பல லட்சம் கோடி டாலர்களைச் சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் குவித்துள்ளன.

அதாவது சர்வதேசச் சந்தையில் விற்கப்படும் சராசரி விலைகளைவிட, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளைக் குறைத்து விற்கின்றனர். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளைப் பன்மடங்கு கூட்டி வாங்குகின்றனர் (Under Invoice, Over Invoice). இதில் மீதமுள்ள தொகைகள் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணமாகக் குவிக்கப்படுகின்றன. 2008-ஆம் ஆண்டில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 16.6-சதவீதம் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு சுமார் 36-சதவீதமாகும்.

கனிமவளம், காட்டுவளம் கொள்ளை போதல்

இந்திய அரசு அந்நிய முதலீடுகளைக் கவர்வது என்ற பேரில் கனிம வளங்கள் மற்றும் காட்டு வளங்களை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களின் வேட்டைக்குத் திறந்துவிட்டது. சுரங்கத்துறை பல பத்தாண்டுகளாக இத்தகைய சட்டவிரோதக் கொள்ளைக்கு ஏற்ற துறையாகத் திகழ்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 2012ஆம் ஆண்டு நீதிபதி ஷா தலைமையில் அமைந்த விசாரணைக் குழு அறிக்கையின்படி ஒடிசாவில் சட்டவிரோதமாகச் செயல்படும் இரும்புத் தாது சுரங்கங்களில் மட்டும் ரூ. 60,000 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, குரோமைட், அலுமினியம் போன்ற சுரங்கங்கள் பற்றி ஷா கமிஷன் ஆய்வு செய்யவில்லை. இவையனைத்தையும் கணக்கிட்டால் பல லட்சம் கோடிகளாக இருக்கும். பெங்களூரில் ரெட்டி சகோதரர்கள், தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆசியோடு மணல் மற்றும் கிரானைட் குவாரிகள் மூலம் வைகுண்ட ராஜன் மற்றும் பி.ஆர்.பழனிச்சாமி போன்றோர் நாடு முழுவதும் பல லட்சம் கோடிகள் கொள்ளை அடிப்பதும் இத்தகைய பணங்கள் கறுப்புப் பணங்களாகவே குவிக்கப்படுவதும் நடைபெற்று வருகின்றன.

ஒடிசாவில் மட்டும் காடுகளில் விளையும் கஞ்சா, மூங்கில், பீடி இலைகள், மூலிகைகள் மற்றும் மூங்கில் அல்லாத காட்டு விளைபொருட்கள் என ஆண்டுக்கு ரூ. 1000-கோடி கொள்ளையடிக்கப்படுவதாகக்
கூறப்படுகிறது. அத்துடன் செம்மரக் கடத்தல், சந்தனமரக் கடத்தல் என விலை உயர்ந்த மரங்களை வெட்டி சர்வதேச சந்தையில் பல லட்சம் கோடிகளுக்கு விற்கப்படுகிறது. இவை அனைத்தும் ஹவாலா வழியில் வெளிநாட்டு வங்கிகளில் டாலர்களாகக் குவிக்கப்படுகின்றன.

மலிவான கூலி உழைப்பு

பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்கள் தொழில் துவங்குவதற்கு அரசாங்கம் வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு, மூலப் பொருட்களின் விலைகளை அதிகரித்துக் காட்டுவது; அதிகபட்சம் செலவு செய்ததாகக் கணக்கு காட்டுவது; உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான சம்பளம் வழங்குவது; காண்ட்ராக்ட் முறையில் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி கொடுப்பது, போனஸ் தர மறுப்பது ஆகியவற்றின் மூலம் கொள்ளை லாபம் காண்கின்றனர். இவை அனைத்தும் சட்ட விரோதமாக நாட்டைவிட்டு வெளியேறுகின்றன.

வரி ஏய்ப்பு

உலகின் பல நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கார்ப்பரேட் வரி குறைவாகவே உள்ளது. இந்தியாவில் கார்ப்பரேட் வரி கடந்த பல ஆண்டுகளாகவே 30 சதவீதமாகத்தான் இருந்து வருகிறது. அமெரிக்காவிலோ கார்ப்பரேட் வரி உள்ளிட்டு மொத்தம் 50 சதவீதம் வரி போடுகின்றனர். ஆனால் இந்தியாவில் தொழில் துவங்கும் பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தக் குறைந்த வரியையும் கூடக் கட்டாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுக் கொள்ளையிடுகின்றன. வோடோபோன் - ஹட்ச் விவகாரத்தில் வோடோபோன் நிறுவனம் ரூ. 13,000-கோடியும், நோக்கியா கம்பெனி ராயல்டி, வட்டி மற்றும் வரி வகையில் ரூ.21,153-கோடியும் கொள்ளையடித்துச் சென்றுள்ளன. இந்தியாவில் செயல்படும் 1915-பன்னாட்டு நிறுவனங்களில் 411-நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளன.

இலஞ்ச ஊழல் மூலம் கறுப்புப் பணம்

பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்கத்தைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்குகின்ற
இலஞ்ச ஊழல் பணம் அனைத்தும் வரியற்ற வெளிநாடுகளில் பதுக்கிக் கொண்டு, வேண்டும்போது கைமாற்றிக் கொள்கின்றனர். 2G அலைக்கற்றை மூலம் ரூ. 1.76-லட்சம் கோடி; காமன்வெல்த் விளையாட்டில் ரூ. 70,000-கோடி; ஸ்டாம்ப் பேப்பர் ஊழல் ரூ. 20,000- கோடி, சத்தியம் ஊழல் ரூ. 14,000-கோடி; கால்நடைத் தீவன ஊழல் ரூ. 900-கோடி; வியாபம் ஊழல் என மாபெரும் ஊழல்களில் பெற்ற பணம் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டன.

சட்டவிரோதமாக மூலதனம் வெளியேறுதல்

மேற்கண்டவாறு வரி ஏய்ப்பு, லஞ்ச ஊழல்கள் மற்றும் பல்வேறு வழிகளில் அரசாங்கத்தை ஏமாற்றி வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்பதை முழுமையாக யாராலும் கூற முடியாது. உலகளாவிய நிதி ஒருங்கிணைப்பு மையத்தின் (Global Financial Integirity) மதிப்பீட்டின்படி 1948- முதல் 2008-வரை 462-பில்லியன் என்று கூறப்படுகிறது. ஆனால் பி.ஜே.பி-யோ அன்று எதிர்க் கட்சியாக இருந்தபோது, அது 500-பில்லியன் முதல் 1.4-டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என்று கூறியது. 2011-ல் சி.பி.ஐ டைரக்டர் உச்சநீதிமன்றத்தில் 500-பில்லியன் டாலர்கள் என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

2012-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திலும் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இந்திய நாட்டின் அந்நியக் கடனைவிட கறுப்புப் பணம் இருமடங்கு வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கறுப்புப் பணத்தைக் கைப்பற்றினாலே இந்திய நாடு ஒர் பூலோக சொர்க்கமாக மாறும்.

கறுப்புப் பணம் வெள்ளையாக மாறுதல்

சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்ட இந்தக் கறுப்புப் பணம் வட்டமடித்து மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு வெள்ளையாக மாற்றப்படுகிறது. மொரீஷியஸ், சிங்கப்பூர் போன்ற வரியற்ற நாடுகள் மூலம் இந்தப் பணம் இந்தியாவிற்குள் பாய்கின்றன. உதாரணமாக 2000-2011 ஆண்டு வரை மொரீஷியஸ் வழியாக 54.227-பில்லியன் டாலர்களும், சிங்கப்பூர் வழியாக 11.895- பில்லியன் டாலர்களும் பாய்ந்து வந்துள்ளன. இவை அனைத்தும் ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை என ஊகவாணிபத்தில் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறு முதலீடு செய்பவர்கள் “பி நோட்ஸ்” (Participatary Notes) மூலம் தங்களின் பெயரை மறைத்துக் கொண்டு பங்கு சந்தையில் முதலீடு செய்து ஊக வாணிபத்தில் சட்டபூர்வமாகச் செயல்படலாம். அந்நிய நிதி அறக்கட்டளைகள், அரசு சாரா அமைப்புகள் (NGOs) மற்றும் பிற அமைப்புகள் பெறுகின்ற நிதிகளில் இத்தகைய கறுப்புப் பணமும் அடங்கும்.

இவ்வாறு புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தும் காலம், கறுப்புப் பணக் காலமாக மாறியுள்ளது. கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பது கறுப்புப் பணம் உருவாவதற்குக் காரணமான புதிய தாராளக்
கொள்கைகளை எதிர்க்காமல், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தைக் கைப்பற்றாமல் வெறும் 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற மோடி கும்பலின் அறிவிப்பால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது.

கருப்புப்பணக் காவலன் மோடி

பாராளுமன்றத் தேர்தலின்போது வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தைக் கைப்பற்றி வீட்டுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்று மோடி வாக்குறுதியளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சியைப் போலவே கறுப்பு பணத்தைக் கைப்பற்ற மறுக்கிறார். சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப்பணத் தகவல்கள், பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் ஆகியவை அரசுக்குக் கிடைத்தும் அவற்றைக் கொண்டு கருப்புப் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை. எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜெர்மனி பதுக்கியவர்களின் பட்டியலை கொடுக்கத் தயாராக இருந்தும் அந்தப் பட்டியலைப் பெற மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பா.ஜ.க-வைச் சேர்ந்த ராம்ஜத் மலானி எம்.பி.யே குற்றம் சுமத்துகிறார்.


செல்லாக்காசு அறிவிப்பால் கறுப்புப் பணக்காரர்கள் தூக்கமிழந்து தவிப்பதாகவும், மக்கள் மகிழ்ச்சியில் திளைப்பதாகவும் மோடி கூறுவது மாபெரும் மோசடியாகும். உண்மையில் மக்கள்தான் வங்கியில்
பணமின்றி பரிதவித்து நிற்கின்றனர். ஆனால் வங்கிகளுக்கே வராத ரூ.2,000 நோட்டுகள் பா.ஜ.க.வினர், அரசியல் கட்சியினர், கருப்புப் பணக்காரர்களிடம் பல்லாயிரம் கோடி குவிந்துள்ளன. ஒருபுறம் 55,000
திருமணங்கள் நின்றுவிட்ட சூழ்நிலையில், பா.ஜ.க.வின் ஆதரவாளரான பெங்களூர் ரெட்டி சகோதரர்கள் தனது மகளின் திருமண வைபோகத்தை ரூ. 600 கோடியில் நடத்தி முடித்துள்ளனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் வீடுகளில் புதிய ரூபாய் நோட்டுகள் கருப்புப் பணமாகக் குவிந்து கிடக்கிறது.

இவ்வாறு கறுப்பு பணத் திமிங்கிலங்களுக்கு காவல் இருக்கும் மோடி தன் உயிர் போனாலும் கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். மோடி தியாகி வேடம் போடுவது நாட்டு மக்களை ஏமாற்றத்தான். அத்துடன் மக்களின் எதிர்ப்புகள், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளுக்குப் பின்பு கூடத் தனது அறிவிப்பைத் திரும்பப் பெற மோடி தயாரில்லை. மாறாக மோடியின் செல்லாக்காசு அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிப் போட்டுவிட்டது. இந்த அறிவிப்பு கறுப்புப் பணத்தைப் பாதுகாப்பதோடு சாதாரண மக்களின் மீதான தாக்குதலாகவே அமைந்துவிட்டது.

முடங்கிப்போன பொருளாதாரம்

மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்ட பணப் பற்றாக்குறையின் காரணமாக, “நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியானது (GDP) இவ்வாண்டு பாதியாகக் குறையும்; அதாவது 6.8-சதவீதத்திலிருந்து 3.5- சதவீதமாக வீழ்ச்சியடையும் என்றும்; 2017-18 ஆம் ஆண்டில் 7.3-சதவீதம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து 6.8-சதவீதமாக சரிவடையும்” என்றும் கேபிட்டல் ஆம்பிட் என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

மோடியின் செல்லாக்காசு அறிவிப்பால் பணப் பரிமாற்றத்தை மட்டுமே நம்பியிருக்கும் விவசாயம் மற்றும் அமைப்பு சாரா தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 482-மில்லியன் பேர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். நாடு முழுவதுமுள்ள 370-மத்தியக் கூட்டுறவு வங்கிகள், 93,000-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பணமின்றி முடங்கிப் போய்விட்டன. ஏற்கனவே பல இன்னல்களைச் சந்தித்துவரும் விவசாயிகள் இனி விவசாயத்திற்கு கூலி கொடுப்பது, உரம் உள்ளிட்ட இடுபொருள்கள், உழு கருவிகள் வாங்குவது என அனைத்துப் பரிவர்த்தனைகளையும் வங்கிகள் மூலம்தான் மேற்கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் திணறிப் போவர். விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தைவிட்டு வெளியேறுவார்கள். இது விவசாயத்தை முற்றுமுழுதும் பெரும் பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களுக்குத் தாரை வார்க்கும் துரோகத்தின் ஒரு பகுதிதான்.

உதிரிப்பாகத் தயாரிப்பு தொழில்கள், டெக்ஸ்டைல், ஆயத்த ஆடை, தோல் தொழில் மற்றும் நகை செய்யும் தொழில்கள் போன்ற அதிக வேலைவாய்ப்பை வழங்கும் சிறு, குறு தொழில்கள் ‘செல்லாக்காசு’ அறிவிப்பால் பாதிக்கப்பட்டு சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் முழுவதுமாகவோ, பகுதி அளவிலோ வேலை இழந்துள்ளனர்.

மோடியின் ‘செல்லாக்காசு’ அறிவிப்பால் சிறு வணிகர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். காய்கறி வியாபாரம், பழ வியாபாரம், பூ வியாபாரம், துணி வியாபாரம், மீன் வியாபாரம் உள்ளிட்ட
அனைத்து சிறிய லாபம் பார்க்கும் தொழில்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

“செல்லாக்காசு அறிவிப்பால் தமிழகத்தில் 21 லட்சம் வணிகர்களின் வாழ்க்கை மூன்று ஆண்டுகளுக்குப் பின்னோக்கிப் போய்விட்டது. பெரிய அளவிலான வணிகம் நடக்கும் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. சிறு வணிகர்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. சில்லறைத் தட்டுப்பாடு 15 நாட்களாகத் தீரவில்லை” எனக் கொந்தளிக்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா.

இவ்வாறு நாட்டின் விவசாயம், சிறு, குறு தொழில்கள் மற்றும் சில்லறை வணிகம் ஆகியவை செல்லாக்காசு அறிவிப்பால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்ற சூழலிலும் கூட மோடி கும்பல் தனது செல்லாக்காசு அறிவிப்பைத் திரும்பப் பெற மறுக்கிறது. “குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை”யாக, மோடி கும்பல் மக்கள் பணமில்லாத பொருளாதாரத்திற்கு மாற வேண்டும் என்று கூறி எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கிறது.

“பணமில்லா பொருளாதாரமும்” புதியகாலனிய சேவையும்

மோடி அரசாங்கம் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து 2000 ரூபாய் தாள்களை மட்டும் வெளியிட்டதால் சில்லறை கிடைக்காமல் புது 2000 ரூபாய் நோட்டும் செல்லாக்காசாக மாறிவிட்டது. மக்களோ நோட்டுக்காக அலையும் போது மோடியோ கிரெடிட் கார்டு, இணையம், வங்கிப் பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை போன்ற டிஜிட்டல் மனி, பிளாஸ்டிக் மனி மற்றும் மொபைல் வாலட் என்று பணமில்லா பொருளாதாரத்திற்கு மாற வேண்டும் எனக் கூறுகிறார்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி இந்தியாவில் வங்கிப் பணப் பரிவர்த்தனை ரூ. 16.42 லட்சம் கோடியாகும். அதில் 500, 1000 ரூபாய் நோட்டுகளின் அளவோ ரூ. 14.8 லட்சம் கோடி ரூபாய்களாகும். அதாவது இந்தியாவின் மொத்தப் பணப் பரிவர்த்தனையில் இது 86.4 சதவீதமாகும். ஒரே இரவில் இவ்வளவு பணத்தையும் செல்லாததாக்கிவிட்டுப் போதிய மாற்று நோட்டுகளைப் புழக்கத்தில் விடாமல் மக்களைப் பொருளாதார நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிட்டு எல்லோரும் டிஜிட்டல் முறைக்கு மாறவேண்டும் என மோடி உத்தரவு போடுகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைப் போல இந்தியாவை பணமில்லாப் பொருளாதாரமாக மாற்றப் போவதாகச் சவடால் அடிக்கிறார்.

6 லட்சம் கிராமங்களைக் கொண்ட இந்தியாவில், 30 கோடி மக்களுக்கு மேல் வங்கிப் பழக்கமோ, புழக்கமோ இல்லாதவர்கள். கழிப்பறைகள் கூட இல்லாத நாட்டில் ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், இண்டர்நெட் பயன்பாட்டைப் பற்றி மோடி பேசுவது வேடிக்கை வினோதமாகும்.

மேலும் இயற்கைப் பேரிடர் காலங்களின் போது மின்சாரம் இல்லாமல், இணையம் இயங்காமல், மொபைல் போன் இயக்கம் தடைபடும்போது எப்படி டிஜிட்டல் முறை சாத்தியமாகும். சாதாரணக் காலங்களில் கூட 30 சதவீதம் பேர் மட்டுமே ஸ்மார்ட் போன் இணைய வசதி பெற்றுள்ள ஒரு நாட்டில், மின்வசதியோ மொபைல் டவர் வசதியோ இல்லாத மலை பகுதி மக்கள் கணிசமாக வாழும் நாட்டில் பணமில்லா டிஜிட்டல் பொருளாதாரம் எப்படிச் சாத்தியமாகும்.

இந்தியாவில் பணப் பரிவர்த்தனை என்பது அதன் ஒட்டுமொத்த உற்பத்தியில் 11-12 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவில் அது 7.5 சதவீதமாகவும், ஜெர்மனியில்-8 சதவீதமாகவும், சீனாவில் 9.5-சதவீதமாகவும் உள்ளது.

ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலேயே இன்னமும் 60 சதவீதம் பணப் பொருளாதாரமாகவே உள்ளது. இந்தியா போன்ற வளர்ச்சி குன்றிய பின்தங்கிய நாட்டில் 80 சதவீதம் பணப் பொருளாதாரமாக இருப்பது தவிர்க்க முடியாதது.

எனவே இந்தியா போன்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்திமுறை மேலோங்கியுள்ள ஒரு நாட்டில், அரைநிலவுடைமை முறையும் கந்துவட்டி முறையும் கோலோச்சுகின்ற ஒரு நாட்டில் அமைப்புசாராத் தொழில்களில் 80 சதவீதம் பேர் வாழுகின்ற ஒரு நாட்டில் வங்கிப் பரிவர்த்தனை, டிஜிட்டல் முறை, பணமில்லாப் பொருளாதாரம் என்பது பேரழிவுகளையே கொண்டு வரும். அரைநிலவுடைமை முறைக்கு முடிவு கட்டி, உற்பத்தி உறவுகளில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு அரசியல் சமூகப் புரட்சியை ஏற்படுத்தாமல் வங்கிப் பரிவர்த்தனை சாத்தியமே இல்லை.

உண்மையில் மோடி கும்பலின் செல்லாக்காசு அறிவிப்போடு பொருட்கள் மற்றும் சேவை வரி (GST), ரியல் எஸ்டேட் சட்டத்திருத்தத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. இவற்றுடன் செல்லாக்காசு
அறிவிப்பும், பணமில்லாப் பரிவர்த்தனையும் சேர்ந்துகொண்டு விவசாயம், சிறு, குறு தொழில்கள் மற்றும் சில்லறை வணிகத்தின் மீது வால்மார்ட், ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு, உள்நாட்டுக் கார்பரேட்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டவே பயன்படும். இதனை நிரூபிக்கும் விதமாகத்தான் அமெரிக்காவின் பில்லியனரும் மோடி அமைத்துள்ள ‘நிதி ஆயோக்கின்’ ஆலோசகருமான பில் கேட்ஸ் மோடியின் செல்லாக்காசு அறிவிப்பையும், பணமில்லாப் பொருளாதாரம் என்ற அறிவிப்பையும் ஆதரித்துப் பின்வருமாறு கூறுகிறார்: “கறுப்புப் பணத்தை ஒழித்து வெளிப்படையான பொருளாதாரமாக மாறுவதற்கும், இந்தியப் பொருளாதாரம் சர்வதேசப் பொருளாதாரத்தோடு இணைவதற்கும் இது அவசியம்” என்று கூறுகிறார். எனவே மோடியின் செல்லாக் காசு அறிவிப்பும், பணமில்லாப் பொருளாதாரம் என்ற சாகசமும் நாட்டின் சிறு, குறு தொழில்களையும் சில்லறை வணிகத்தையும் அழித்து பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வீதியில் தள்ளும்.

மக்களின் சேமிப்பு நிதிமூலதன கும்பலின் பிடியில்

செல்லாக்காசு அறிவிப்பின் மூலம் மக்கள் உழைத்துச் சம்பாதித்த பணம் ரூ. 5-லட்சம் கோடிகளை வங்கியில் வைப்பு நிதியாக்கிவிட்டது மோடி கும்பல். வங்கிகள் மல்லையா போன்ற தரகுப் பெருமுதலாளிகளுக்கு வாரி வழங்கிய கடன்கள் வாராக்கடனாக மாறியதால் வங்கிகளின் மீதான நம்பகத் தன்மை குறைந்து போனது. வங்கித் துறையில் அந்நிய முதலீடு வருவதற்கு இதனை ஒரு பிரச்சினையாக பன்னாட்டு நிதி நிறுவனங்கள் முன்வைத்தன. தற்போது மக்களின் பணத்தை வங்கியில் வைப்பு நிதியாக்கி மல்லையா போன்ற முதலாளிகளின் வாராக் கடனைத் தள்ளுபடி செய்வதற்கும், வங்கிகளை பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் மக்களின் சேமிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டது. வங்கித் துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் திறந்து விடுவதன் மூலம், இந்திய நாட்டு மக்கள் சேமித்துவைத்த பணம் முதலீடுகளாக ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த நிதிமூலதனக் கும்பல்களிடம் தாரைவார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏகபோக நிதிமூலதனக் கும்பலின் ஆதிக்கத்தின் கீழ் நாட்டைத் தள்ளுகிறது.

எனவே மோடி அரசின் செல்லாக்காசு அறிவிப்பும், பணமில்லாப் பொருளாதாரம் என்ற அறிவிப்பும் நாட்டில் கறுப்புப் பணத்தையும் ஒழிக்காது, பொருளாதாரத்தையும் நெருக்கடியிலிருந்து மீட்காது. சிறு, குறு தொழில்கள் அழிவதோடு சில்லறை வணிகத்தையும் அழித்து நாட்டின் மீது பன்னாட்டுக் கம்பெனிகளின் ஆதிக்கத்தையே வலுப்படுத்தும்.

கறுப்புப் பணத்தை ஒழிப்பது எப்படி?

ஏகாதிபத்திய நெருக்கடி ஆழப்படுவதால் உற்பத்தியிலிருந்து பிரிக்கப்பட்ட ஊகவாணிபமும், ஊழலும், கறுப்புப் பணமும் வரலாறு காணாத அளவில் பெருகிவருகிறது. குறிப்பாக 2008-அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியைத் தொடர்ந்து கார்ப்பரேட்மயம், நிதிமயமாகும் போக்கு தீவிரமடைவதும், மூலதனம் உற்பத்தியிலிருந்து தனியாகப் பிரிந்து ஊகவாணிபம் பெருகுவதுடன் கறுப்புப் பணப் பொருளாதாரமே ஒரு ஒழுங்குமுறையாக (System) மாறிவருகிறது.

2007-08ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம் கிரைசிஸ்” என்ற முதலாளித்துவ நெருக்கடியானது, தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடியாக வெளிப்பட்டு, தற்போது உலகம் முழுவதும் பரவி, மீளமுடியாத நிரந்தர நெருக்கடியாக மாறியுள்ளது.

இடையில் உலக பொருளாதார மீட்சி பற்றிப் பேசப்பட்டாலும் சர்வதேச நாணயச் சங்கம் (IMF) அதன் ஆண்டறிக்கையில் பின்வருமாறு எச்சரிக்கிறது: “உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.4- சதவீதத்திலிருந்து 3.1-சதவீதமாக வீழ்ச்சியடையும் என்றும், 2008-நெருக்கடிக்குப் பின் ஆறு ஆண்டுகள் கழிந்த பிறகும் உலகப் பொருளாதாரம், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தையகால நெருக்கடி அளவுக்கு வீழ்ச்சியடைந்துவிட்டது என்றும், வளர்ச்சி என்பது மாயையாகவே உள்ளது” என்றும் கூறுகிறது.

அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளில் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் கடுமையாக வீழ்ச்சியடைவது, வேலையின்மை பெருகுவது, வரலாறு காணாத அளவில் அகதிகள் பிரச்சினை என வெடித்துக் கிளம்பியுள்ளன. ஏகாதிபத்திய நாடுகளில் 2008-13 காலகட்டத்தில் வேலையின்மை 45 சதவீதம் அதிகரித்துவிட்டது. 48 சதவீத ஓய்வூதியதாரர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர். ஏகாதிபத்திய நாட்டு மக்களின் வாங்கும் சக்தி குறைந்து போனதுடன் உலக மக்கள் தொகையில் சரிபாதியான 300 கோடி மக்கள் ஒரு நாளைக்கு 2 டாலர் கூட சம்பளம் இல்லாமல் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அதன் உற்பத்தி ரீதியான பொருளாதாரம் 70ஆம் ஆண்டின் பெரும் நெருக்கடிகால அளவுக்குச் சுருங்கிவிட்டது. அத்துடன் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் கடுமையாக அதிகரித்து வருகின்றன. முதல் பத்துப் பணக்காரர்கள் தேச வருமானத்தில் பாதிக்கும் மேலும், செல்வத்தில் முக்கால் பங்கையும் உடைமையாகக் கொண்டுள்ளனர். ஏற்றத் தாழ்வுகள் பெருகிக் கொண்டே செல்கின்றன. உலகில் அதிகரித்து வரும் வேலையின்மை, வறுமை, ஏற்றத்தாழ்வுகள் பெருகுவது போன்ற காரணங்களால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து, உலகச் சந்தை சுருங்கிவிட்டது. எனவே உற்பத்தி ரீதியிலான துறைகளில் முதலீடுகள் குறைந்து உலகில் ஊக வாணிபமே கோலோச்சுகிறது.

உலக அளவில், உற்பத்தித் துறையில் இழுபறியும், தேக்கநிலையும் அத்துடன் ஒட்டுமொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் மந்தநிலையும் தொடர்வது என்பது ஊக வாணிபம் மற்றும் சொத்துமதிப்பு ஊதிப் பெருகி நிதிமயமாக்கல் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ‘கிரெடிட் சூசி உலகளாவிய சொத்து’ (CREDIT SUISSE GLOBAL WEALTH) என்ற அமைப்பின் ஆய்வின்படி “ரியல் எஸ்டேட் மற்றும் நிதிமூலதனக் கும்பலின் ஊகவாணிப வளர்ச்சி, உலக அளவில் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 2013ஆம் ஆண்டின் நடுப் பகுதியிலிருந்து 2014ஆம் ஆண்டு நடுப்பகுதி வரையிலான ஓரே ஆண்டில் இத்தகைய ரியல் எஸ்டேட் மற்றும் நிதிமூலதனக் கும்பல்களின் சொத்துகளின் மதிப்பு 20.1 டிரில்லியன்கள் அதிகரித்து மொத்தம் 263 டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதே போல உலக அளவில் 50 மில்லியன் டாலர்களுக்கு அதிகமான சொத்துப் படைத்தவர்களின் எண்ணிக்கை 1,28,200 பேர்கள் என்றும், 100-மில்லியன் டாலர்களுக்கு மேல் சொத்துப் படைத்தவர்களின் எண்ணிக்கை 45,200-என்றும், 500-மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாகச் சொத்துடையவர்களின் எண்ணிக்கை 4,300-என்றும் கூறுகிறது. அதே போல் அமெரிக்காவின் 62,800-உயர் பணக்காரக் கோடீஸ்வரர்கள் உலகின் மொத்த வருமானத்தில் 49-சதவீதத்தை குவித்துள்ளனர். அதே நேரத்தில் நிதிமூலதனக் கும்பல்கள் குறுகிய காலத்தில் சொத்துக் குவிப்பின் நிகழ்வுப்போக்கை விற்று முதலும் லாபமும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, உற்பத்தியில் ஈடுபடும் முதல் பத்து கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களின் வருமானம் மற்றும் நிகரலாபம் 2011-ல் 1.82-டிரில்லியன் டாலர்கள் மற்றும் 98.32-பில்லியன் டாலர்களாக இருந்தது. அது 2014-ல் 2.2-டிரில்லியன் மற்றும் 141.04-பில்லியன்
டாலர்களாக உயர்ந்தன.” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இவ்வாறு செல்வம் ஒருசிலர் கைகளில் குவிவதற்கான காரணம் என்ன?

அமெரிக்க அரசாங்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து முதலாளிகளை மீட்பதற்கு ஊக்கத்தொகை என்றும் நட்ட ஈடு என்றும் ஆண்டுக்கு 700-பில்லியன் டாலர்களைக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும்
நிதிமூலதன கும்பல்களுக்கும் மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்கியது. அமெரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பிய யூனியன், சீனா, ஜப்பான் போன்ற ஏகாதிபத்திய நாடுகளிலும், இந்தியா போன்ற
புதியகாலனியத்திற்கு உட்பட்ட நாடுகளிலும் டிரில்லியன் கணக்கிலான டாலர்கள் சலுகைகளாக வழங்கப்பட்டன. இந்திய அரசு ஆண்டுக்கு ரூ.5-லட்சம் கோடி அரசாங்கப் பணத்தை பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்களுக்குச் சலுகைகளாக வாரி வழங்கிவருகிறது. அத்துடன் பொது சொத்துகளையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிப்பதற்கான தடைகளும் அகற்றப்பட்டன. இத்தகைய காரணங்களால்தான் உயர் பணக்காரக் கோடீஸ்வரர்களின் செல்வம் இந்த அளவிற்குக் குவிந்தது.

உலக சமுதாயப் படிநிலையில் மேல் மட்டத்தில் இருப்பவர்கள், புதுப்புது முறைகளில் ஊகவாணிப முறைகளைக் கண்டுபிடிப்பதன் மூலமும், இயற்கை வளங்களை முதலாளித்துவத்துக்கு முந்தைய முறைகளில் கொள்ளையடிப்பதன் மூலமும் மட்டுமே இந்த அளவுக்குக் குவிக்கவில்லை. அத்துடன், தொழிலாளி வர்க்கம் மற்றும் பரந்துபட்ட மக்களின் மீது கொடூரமான தாக்குதல்களை நடத்துவதன் மூலமும் செல்வத்தைக் குவிக்கின்றனர். அதாவது, சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை மடை மாற்றிக் கொள்வது, ஓய்வூதிய நிதியை அபகரித்துக் கொள்வது, கூலியைக் குறைப்பது, லே-ஆப் கொடுப்பது மற்றும் தொழிற்சாலைகளை மூடுவதன் மூலமும், ஊக்கத்தொகை மற்றும் நட்ட ஈடு என்று வழங்கிய பல லட்சம் கோடிகளைக் கொள்ளையடிப்பதன் மூலமும் சொத்துகளைக் குவிக்கின்றனர்.

உண்மையில் அரசாங்கம் வழங்கும் பொருளாதார மீட்சிக்கான இத்தகைய நிதி உதவிகளைக் கொண்டு பொருளாதாரத்தை உற்பத்தி ரீதியில் விரிவுபடுத்துவதற்குப் பதிலாக கார்ப்பரேட்களும், நிதிமூலதனக்
கும்பலும் பங்குச்சந்தை சூதாட்டம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற ஊக வாணிபத் துறைகளில் முதலீடு செய்கின்றனர். பங்குகளைத் திரும்பப் பெறுவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் பங்குகளின் விலைகளை செயற்கையாகக் கூட்டிக்குறைப்பதன் மூலம் தங்களது சொத்துக்களைப் பன்மடங்கு பெருக்கிக் கொள்கின்றனர். அமெரிக்கப் பெடரல் வங்கி ஏராளமான டாலர்களை அச்சடித்து கார்ப்பரேட் மற்றும் நிதிமூலதனக் கும்பலிடம் ஒப்படைத்து ரியல் எஸ்டேட், டாலர் விற்பனை, பங்குப் பத்திர முதலீடு மற்றும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது. இத்தகைய ஒட்டுண்ணிக் கூட்டமும், அரசாங்க ஆதரவுடன் பல்கிப்பெருகும் ‘குரோனி கேப்பிட்டலிசமும்’ வெறிபிடித்த வேங்கையைப் போல உலகையே விழுங்கி வருகின்றன.

வரலாறு காணாத அளவில் கார்ப்பரேட் மற்றும் நிதிமயமாகும் இத்தகைய போக்கின் வெளிப்படையான அறிகுறி என்னவெனில், உலக அளவில், என்றும் இல்லாத அளவுக்கு கணக்கில் காட்டப்படாத அல்லது
சட்டவிரோதமாகச் சேர்த்த கறுப்புப் பணத்தைக் கடல் கடந்த வரிகளற்ற “சொர்க்க புரிகளில்” பணத்தைப் பெருமளவில் குவித்து வைப்பதுதான். இவ்வாறு குவிக்கப்பட்டுள்ள பணம் பற்றி சர்வதேசத் துப்பறியும் பத்திரிக்கையாளர்களின் கழகம் அண்மையில் 2.5-லட்சம் கோப்புகளை வெளியிட்டுள்ளது. உலக அளவிலான உயர் பணக்காரக் கோடீஸ்வரர்கள் கறுப்புப் பணத்தைக் கடல் கடந்து இரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள பணத்தின் மதிப்பு 2005இல் 11.5-டிரில்லியன் டாலர்களாக இருந்ததிலிருந்து 2013-ஆம் ஆண்டு மூன்று மடங்கு அதிகரித்து 32-டிரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது.

இதில் மிகவும் கவனத்திற்குரியது என்னவென்றால், இத்தகைய சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் என்பது கிளாரிடன் போன்ற சுவிஸ் வங்கிகளின் மூலம் மட்டுமே நடக்கவில்லை. மாறாக நிதி அரங்கில் உலக அளவில் இயங்கிவரும் பிரதான வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களான ஜே.பி.மார்கன், டச்சு வங்கி, யு.பி.எஸ், ஐ.என்.ஜி, ஏ.பி.என்.அம்ரோ, கிரிண்ட் லேஸ் வங்கி, சிட்டி கார் போன்றவைகளும் கறுப்புப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்றன. சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களை சட்டபூர்வமாக இவை மாற்றுகின்றன. இவை அனைத்தும் 2008-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பின் நிதி மூலதனக் கும்பல்களைப் பாதுகாப்பதற்காக அமல்படுத்திவரும் புதிய தாராளக் கொள்கைகளின் நேரடியான விளைவுகளாகும். புதியதாராளக் கொள்கைகளும் கறுப்புப் பணமும் பிரிக்கமுடியாததாகிவிட்டது. இத்தகைய கறுப்பு பண பொருளாதாரத்திற்கு சேவை செய்யும் கொள்கைகளைத்தான் மோடி கும்பல் மூர்க்கத்தனமாக அமல்படுத்தி வருகிறது.

மோடியின் புதிய காலனிய சேவையும் எமர்ஜென்சிக்கான முயற்சிகளும்

மோடி கும்பல் வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்றும் கறுப்புப் பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ. 15 லட்சம் கணக்கு வைப்பேன் என்றும் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு இது எது ஒன்றையும் நிறைவேற்றவில்லை. இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. மோடி அரசு அமல்படுத்தி வரும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தொழிற்துறை உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி மந்தம், விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு, வேலையின்மைப் பெருக்கம், விலைவாசி உயர்வு போன்ற எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாமல் திண்டாடுகிறது. கருப்புப் பணத்தை மீட்பதாகக் கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மோடி ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மோடி ஆட்சிமீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்திகளைத் திசைதிருப்பவும், உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று தனது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் மோடி ஆட்சி திடீரென்று கருப்புப் பண ஒழிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதையும் எதேச்சதிகாரமான முறையில் வெளியிட்டுள்ளது. புதிய தாராளக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவதுடன் நாட்டில் ஒரு எதேச்சதிகார பயங்கரவாத ஆட்சிக்கு வித்திடுகிறது.

காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை மறுத்து அம்மக்கள் மீது ஒரு உள்நாட்டு யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடுவதோடு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏவுகிறது என்று கூறி பாகிஸ்தான் மீது போருக்குத் தயாரிக்கிறது. பாகிஸ்தானுடன் போரைக் காரணம் காட்டிக் காஷ்மீர் மக்கள்மீது மட்டுமல்ல பாகிஸ்தான் எல்லையோரத்தில் வாழும் மக்களை இடப் பெயர்வு என்ற பேரால் பல லட்சம் பேரை அகதிகளாக்கி உள்நாட்டில் மக்களை வதைக்கிறது. மேலும் பாகிஸ்தான் எதிர்ப்பை முன்வைத்து இஸ்லாமியச் சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் திசை திருப்பி, இந்து தேசம் பேசி மதவெறியைத் தூண்டி கலவரங்களை நடத்தி வாக்குவங்கியை உருவாக்குகிறது. இதனை எதிர்த்துப் பேசும் எதிர்க்கட்சியினரைச் சிறையிலடைக்கிறது. தொலைக்காட்சி ஊடகங்களுக்குத் தடை விதிக்கிறது.

 மறுபுறம் மாவோயிஸ்டுகள் மற்றும் ‘சிமி’ இசுலாமிய மாணவர் அமைப்பினரை சட்டவிரோதமாக என்கவுண்டர் பேரில் சுட்டுத் தள்ளுகிறது. குஜராத் முதல் மத்தியப்பிரதேசம் வரை பாஜக ஆட்சியில் புரட்சியாளர்கள், சிறுபான்மை மதத்தினர் மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மீது அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது என்று கூறி அரச பயங்கரவாதமே தலைவிரித்தாடுகிறது. மோடி அலை என்றார்கள். நாட்டில் மோடியின் அலை அடிக்கவில்லை, கொலைகள்தான் நடக்கின்றன. இவையெல்லாம் எமர்ஜென்சி காலத்தையே நினைவூட்டுகின்றன.

அமெரிக்காவில் தீவிர வலதுசாரியான டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும், ஐரோப்பாவில் பல நாடுகளில் வலதுசாரிக் கட்சிகள் அதிகாரத்திற்கு வருவது என்பதும், இந்தியாவில் இந்துத்துவப் பாசிச சக்திகளுக்கு பலத்தை அளித்துள்ளது. ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களின் தாசர்களும் உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உள்நாட்டு மக்கள் மீது பாசிசத்தைக் கட்டவிழ்த்து விடுவதோடு போருக்குத் தயார் செய்கின்றனர்.
 ஒரு புறம் அமெரிக்காவின் தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மறுபுறம் ரஷ்ய, சீன ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையில் மூன்றாம் உலகப் போர் மூளும் என்ற சூழல் உருவாகி உள்ளது.

ஏகாதிபத்தியப் போரில் ஈடுபட்டு காலனி ஆதிக்கத்திற்கும் அழிவிற்கும் உள்ளாவதா? அல்லது புரட்சியின் மூலம் போரை ஒழித்து வளர்ச்சிக்கு வழிகோலுவதா? என்பதே இன்றைய அரசியலில் முக்கியக் கேள்வியாகும். மோடி கும்பல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக மேலாதிக்கத்திற்கான போருக்கு ஆதரவளிப்பதோடு இந்துத்துவப் பாசிசத்தைக் கட்டியமைக்கிறது. இத்தகைய சூழலில் போருக்கு எதிராகவும், பாசிசத்திற்கு எதிராகவும், புதிய தாராளக் கொள்கைகளை முறியடிக்கவும் தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட புரட்சிகர ஜனநாயக சக்திகளும், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள வேண்டியது அவசர அவசியக் கடமையாக மாறியுள்ளது.

நாடாளுமன்றவாத எதிர் கட்சிகளின் நாடகம்

மோடி அரசாங்கம் எதேச்சதிகாரமாக அமல்படுத்திய செல்லாக்காசு அறிவிப்பைத் திரும்பப் பெறு என்று கோரி காங்கிரஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில்
ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆனால் எதிர்க் கட்சிகளின் இந்த ஒற்றுமை உடனடியாக உடைந்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்ப்பதாகப் பேசி வந்த ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி கட்சியின் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் போன்ற ஜனதா பரிவாரங்கள், மாநிலக் கட்சிகளான தெலுங்கு தேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஒரிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் போன்றவர்கள் மோடியின் செல்லாக்காசு திட்டத்தை வரவேற்கின்றனர். மம்தாவின் திரிணாமுல் காங்கிரசும் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பால்தாக்கரேவின் சிவசேனா, உமர் பருக்கின் காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற மாநிலக் கட்சிகள் ஓரணியாக இருந்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும் என்று கோருகின்றன. காங்கிரஸ் மற்றும் இடது, வலது போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளோ தனி அணியாகச் செல்லாக்காசு அறிவிப்பைக் கால அவகாசம் கொடுத்து அமல்படுத்த வேண்டும் என்று கோருகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக போன்ற கட்சிகள் மக்கள் மத்தியில் எதிர்ப்பு வலுவடைந்தவுடன் எதிர்ப்பதாகக் கூறுகின்றன. நாடாளுமன்றவாத எதிர்க் கட்சிகள் எதுவொன்றும் கறுப்புப்
பணத்திற்கு அடிப்படையான புதியகாலனிய, புதிய தாராளக் கொள்கைகளை எதிர்க்கத் தயாரில்லை. புதிய தாராளக் கொள்கைகளை அமல்படுத்துவதில் இக்கட்சிகளுக்குள் ஒற்றுமை நிலவுகிறது. எனவே மோடி ஆட்சி எதேச்சதிகாரமாக அறிவித்த ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற ஒன்றுபட்டுப் போராடத் தயாரில்லை. மேலும் இக்கட்சிகளும் கூடப் புதிய காலனியத்திற்கு சேவை செய்து ஊழலில் மாட்டி வழக்குகளைச் சந்திக்கின்ற கட்சிகள்தான். எனவே இக்கட்சிகளால் மோடி அரசின் செல்லாக்காசு அறிவிப்பையோ, பாசிசப் போக்கையோ உறுதியாக எதிர்த்துப் போராடாது.

புதிய தாராளக் கொள்கைகள் ஒழிப்பே கறுப்புப் பண ஒழிப்புக்கு வழி

புதியகாலனிய புதிய தாராளக் கொள்கைகளின் விளைவாக சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் ஊக வாணிபமும் கறுப்புப் பணமும் இணைந்து செயல்படுகின்ற ஒரு சூழலில் மோடி கும்பல் அறிவித்துள்ள 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பும் 2000 ரூபாயை அறிமுகப் படுத்தியது என்பதும் கறுப்புப் பணத்தை ஒழிக்காது. மாறாகக் கறுப்புப் பணம் பாதுகாக்கப்படுவதோடு அதிகரிக்கவே வழி வகுக்கும்.

மார்க்சிய அறிஞர் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் பிரபாத் பட்நாயக் கறுப்புப் பணம் பற்றி சரியான கருத்தைக் கொண்டிருந்தாலும், கறுப்புப் பணம் உருவாவதற்கான புதிய காலனிய, புதிய தாராளக் கொள்கைகளை எதிர்க்காமல் புலனாய்வு துறையில் பொறுமையும், திறமையும் நிறைந்த நேர்மையான அதிகாரிகளை அதிக அளவில் கொண்ட அமைப்பை நிறுவிவிட்டால் கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டுவந்து விடுவோம் என்று கூறுவது போலவோ; திருத்தல்வாதக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி கூறுவதுபோல கறுப்புப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவது, உள்நாட்டில் அரசு வங்கிகளில் கடன் வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்களிடம் இருந்து வாராக்கடனை வசூலிப்பதால் மட்டுமோ; அல்லது புதிய காலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துக் குறிப்பான திட்டத்தை முன்வைத்து, வர்க்க அணிசேர்க்கை பற்றி பேசாமல், மொத்த அமைப்பு முறையையும் மாற்றியமைக்க உளிகளைக் கையில் ஏந்துவது என்று பொத்தாம்பொதுவாக வீராவேசமாகக் குரல் கொடுக்கும் வினவு இணையப் பத்திரிகை கூறுவது போலவோ கறுப்புப் பணப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாது.

உண்மையில் கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்பது ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கொள்கைகளையும், புதிய தாராளக் கொள்கைகளையும் திரும்பப் பெறுவதன் மூலமும், பன்னாட்டு, உள்நாட்டுக்
கார்ப்பரேட்கள் சட்டவிரோதமாக வரியற்ற சொர்க்கபுரியில் பதுக்கிவைத்துள்ள கறுப்புப் பணத்தை மட்டுமல்ல அவைகளின் அனைத்து சொத்துகளையும் கைப்பற்றி அரசுடைமை ஆக்குவதன் கூடவே,
உற்பத்தியில் முதலீடு செய்வதற்குத் தடையாக, உலகச் சந்தை சுருங்கி ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து வர்த்தகம் பாதித்துவரும் சூழலில் கிராமப் புறங்களில் முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறைகளை ஒழித்து, குறிப்பாக அரைநிலவுடைமை முறைகளை ஒழித்துக் கட்டுவதன் மூலம் முதலீட்டுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அது ஒன்றுதான் ஊக வாணிபத்திற்கு முடிவு கட்டவும், கறுப்புப் பணத்திற்கு முடிவு கட்டவுமான ஒரே வழியாகும். அது ஒன்றுதான் கந்து வட்டி முறைகளை ஒழித்து வங்கிப் பரிவர்த்தனைக்கு விவசாய மக்களைக் கொண்டு வருவதற்கான வழியுமாகும். அதாவது அந்நிய மூலதனம் கோலோச்சுகின்ற புதியகாலனிய உற்பத்தி உறவுகளுக்கு முடிவுகட்டி நாட்டில் ஒரு சுதந்திரமான சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது ஒன்றுதான் கறுப்புப் பண ஒழிப்பு பிரச்சினைகளுக்கும், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்குமான ஒரே வழியாகும்.

எனவே புதிய காலனிய, புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், கறுப்புப் பணத் திமிங்கிலங்களின் சொத்துகளைக் கைப்பற்றி அரசுடைமையாக்கவும், கறுப்புப் பணக் காவலன் இந்துத்துவப் பாசிச மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றவும் கோருகின்ற அனைவரும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.

மோடி அரசே!

* மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!


* சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள முதலாளிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடு! அவர்களின் உடைமைகளை அரசுடைமையாக்கு!


*  உள்நாட்டில், பங்குச்சந்தைச் சூதாடிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், தரகு முதலாளித்துவ அரசியல் வாதிகள், அதிகாரிகளின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்று!


*  கறுப்புப் பணக் காவலன் மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றுவோம்!


* புதிய காலனியத்திற்கும் கறுப்புப் பணம் குவிப்பிற்கும் சேவை செய்யும் புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவோம்!

*  எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டுவர முயலும் மோடி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்- தமிழ்நாடு
 
டிசம்பர் -2016

Saturday, 3 December 2016

மோடி நோட்டு மோசடி வள்ளுவர் கோட்டத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜெயா இறப்பு ,வர்தா புயல் காரணமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த திட்டமிட்டிருந்த செல்லாக்காசு மோடி ஆர்பாட்டம்,  தருமபுரி BSNL அலுவலகம் அருகில் 26 .12 .2016 திங்கள்கிழமை மாலை 4.00 மணியளவில் நடைபெறும் .தலைமை தோழர்.மாயகண்ணன் ம.ஜ.இக தருமபுரி மாவட்ட அமைப்பாளர், கண்டன உரை தோழர், ஞானம் ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர், தோழர் மனோகரன் ம.ஜ.இ.க சிறப்பு பேச்சாளர்.
அனைவரும் வருக, கண்டனம் முழங்குக , நிதி வழங்குக .
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்.
 
===============================================================
 
வள்ளுவர் கோட்ட கழக ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்
முதலாம் மாற்றம்
16-12-2016
இரண்டாம் மாற்றம்
19-12-2016
தமிழக சென்னைச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக
12-12-2016 நடைபெறவிருந்த ``செல்லாக் காசு``எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் 19-12 -2016 திங்களுக்கு மறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(சிரமத்துக்கு வருந்துகின்றோம்)
 
 


Monday, 21 November 2016

மோடியின் `கறுப்புப் பண ஒழிப்பு`- முகத்திரை கிழிக்கும் கழகம்.

 
மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் - 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்துச் செய்!!
 
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயகவாதிகளே!!
 
மத்தியில் ஆளும் இந்துத்துவப் பாசிச மோடி ஆட்சி அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்டது. மோடி அரசு அமல்படுத்தி வரும் புதியகாலனிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது. தொழிற்துறை உற்பத்தி வீழ்ச்சி, ஏற்றுமதி மந்தம், விவசாய நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு, வேலையின்மை பெருக்கம், விலைவாசி உயர்வு போன்ற எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாமல் திண்டாடுகிறது. கறுப்புப் பணத்தை மீட்பதாக கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மோடி ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
மோடி ஆட்சிமீது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்திகளை திசைதிருப்பவும், உ.பி, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தலில் வெற்றிப் பெற்று தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவும் திடீரென்று கறுப்புப் பண ஒழிப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதையும் எதேச்சாதிகாரமான முறையில் வெளியிட்டுள்ளது.
 
மோடியின் கறுப்பு பண ஒழிப்பு நாடகம்
 
500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் ஊழல், வறுமை, கறுப்பு பணத்தை ஒழிப்பதுடன் பயங்கரவாதத்தையும் ஒழிக்கப் போவதாக சவடால் விடுகிறார் மோடி. ஆனால், மோடியின் இந்த அறிவிப்பால் கறுப்பு பணத்தை ஒழிக்கமுடியாது. மொத்த கறுப்புப் பணத்தில் 5லிருந்து 6 சதவீதம் வரைதான் பணமாக உள்ளது. இந்த அறிவிப்பால் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது. மேலும் இந்த அறிவிப்பே ஒரு மாபெரும் ஊழல் என்றும், இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு 10 நாளைக்கு முன்பே அம்பானி, அதானி போன்ற மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்கும், பி.ஜே.பி.-யினருக்கும் தகவல்களை தெரிவித்து கறுப்புப் பண திமிங்கிலங்களை காப்பாற்றிவிட்டார் மோடி என்றும் குற்றம் சுமத்தியுள்ளார் டெல்லி முதல்வர் கேஜரிவால். மேலும், பணம் 500, 1000 ரூபாயாக இருப்பதைவிட வெளிநாடுகளில் சொத்துக்களாக குவிந்துள்ளதே அதிகமாகும். பனாமா பேப்பர்ஸ் மூலம் கறுப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியல் மத்திய அரசிடம் உள்ளது. அதேபோல சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் 120 லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் இருப்பதாக கணக்கிட்டுள்ளன. இவற்றை மீட்டு கொண்டுவராமல் ரூ.500,1000 நோட்டுக்களை செல்லாது என்ற அறிவிப்பின் மூலம் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியாது. இந்த அறிவிப்பு கறுப்பு பண திமிங்கிலங்களின் அடியையோ முடியையோ கூட அசைக்கவில்லை. மாறாக ஏழை நடுத்தர மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
 
 
பொருளாதார எமர்ஜென்சி

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் நாட்டின் பணப்புழக்கம் அடியோடு ஸ்தம்பித்துவிட்டது. வங்கி, ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க கால்கடுக்க நீண்ட வரிசையில் நின்று மக்கள் வதைப்படுகின்றனர். நெரிசலில் 47 பேர்கள் மரணமடைந்துள்ளனர். மோடியின் ஆட்சியில் ஏ.டி.எம். மரணங்கள் தொடருகின்றன. மேலும் சில்லரை வர்த்தகம், மொத்த வர்த்தகம், சிறு தொழில், சரக்கு போக்குவரத்து, மீன்பிடித் தொழில் என உள்நாட்டுத் தொழில்கள் முடங்கிவிட்டன. உ.பி., ம.பி. போன்ற மாநிலங்களில் மக்களிடம் பணம் இன்றி கடைகளை சூறையாடுகின்றனர். ராஜஸ்தானில் இலட்சக்கணக்கான விவசாயிகள் ராவி பருவ விதைப்பை செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். கோவை திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் முடங்கிவிட்டன. கிராம கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் ஒரு வாரகாலமாக முடங்கியுள்ளன. நான்கு நாளைக்குள் ரூ.1.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சாதாரண நிலைமைக்கு வர பல வாரங்கள் ஆகும் என நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறுகிறார். மக்களின் துயரம் தொடர்கிறது. மோடியின் அறிவிப்பு நாட்டு மக்கள் மீது ஒரு பொருளாதார எமர்ஜென்சியை திணித்துள்ளது.
 
500, 1000 என்ற அதிக மதிப்புள்ள நோட்டுகளை ஒழித்துவிட்டால் கறுப்புப் பணத்தை ஒழித்துவிடலாம் என்று மோடி கூறுகிறார். ஆனால் புதிதாக 2000 ரூபாய் நோட்டை வெளியிட்டு கறுப்பு பண பதுக்கலுக்கு வழிவகுத்து கொடுக்கிறார். மீண்டும் 1000 ருபாய் நோட்டை கொண்டுவருவோம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது மூலம் ரூ.400 கோடிதான் அரசுக்குக் கிடைக்கும். ஆனால் புதிய நோட்டுக்களை அச்சடித்து சுற்றுக்குவிட அரசுக்கு மொத்தம் ரூ.14,000 கோடி செலவழியும். பின்னர் எதற்காக ஏழைகளை வாட்டிவதைக்கும் இந்த 500, 1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு. மலையை கெல்லி எலியைக் கூட பிடிக்காமல் நாட்டில் கிலியை ஏற்படுத்தியுள்ளார் மோடி. எனவேதான் கறுப்புப் பணத்தை காப்பாற்றும், ஏழை நடுத்தர மக்களை வதைக்கும் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறோம்.
 
கறுப்புப் பணத்தை கைப்பற்ற வழி என்ன?
 
கறுப்புப் பணம் என்பது மத்திய மற்றும் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய வணிகவரி, சேவை வரி, வருமான வரி, கலால் வரி, சுங்கக் கட்டணம் போன்ற வரிகளை முறைப்படி அரசுக்கு செலுத்தாமல் வரி ஏய்ப்பு மூலம் ஒருவர் ஈட்டிய பணத்தை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கிவைக்கும் பணமாகும்.
 
உள்நாட்டில் கறுப்புப் பணம்
 
அமைச்சர்கள், அதிகாரிகள், சாராய கம்பெனி முதலாளிகள், தொழிலதிபர்கள், மணல்-கிரானைட் மாஃபியாக்கள் ஆகியோரே கறுப்புப் பணத்தை குவித்து வைத்திருப்பவர்கள். மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளை நேரடியாக அமைச்சர்கள்தான் கையாள்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து ஒரு பகுதியை சுருட்டிக்கொள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அரசு உயர் அதிகாரிகள் துணைபோகிறார்கள்.. அவர்கள் தங்கள் பங்குக்கு சில கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொள்கிறார்கள்.

 
இப்படி பொதுத்திட்டங்கள் மூலமாக இவர்கள் அடிக்கும் ஊழல் பணம் ஒரு பக்கம் இருக்க, கல்வி நிலையங்கள் மாணவர் சேர்க்கைக்கு வாங்கும் பல லட்சங்களும் கறுப்புப் பணமாகவே சேர்கிறது. மேலும் தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பு மூலம் கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் கோடிகளை பதுக்குகிறார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பதுக்குவதுதான் பல லட்சம் கோடிகளாக வளர்ந்நு நிற்கிறது.
 
வெளிநாட்டில் குவிந்துள்ள கறுப்பு பணம்
 
கறுப்புப் பண பதுக்கலுக்கு சொர்க்கபுரியாக திகழும் சுவிஸ் வங்கி, உலக நாடுகளின் வற்புறுத்தலுக்குப் பின் வெளியிட்ட அறிக்கையில் இந்தியர்கள் மட்டுமே 1500 மில்லியன் டாலர் கறுப்பு பணத்தை அங்கே டெபாசிட் செய்துள்ளதாக கூறுகிறது. இதன் மதிப்பு ரூ.70 லட்சம் கோடி. சுவிஸ் வங்கியில் பதுக்கிவைத்திருக்கும் நபர்களின் பட்டியலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் டாப் இந்தியர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. அவர் கொடுத்த ஆதாரங்களின் படி 1970களிலிருந்தே இந்தியர்கள் பங்கு சந்தை மூலமாகவும், போதைப் பொருட்கள் மூலமாகவும், அறக்கட்டளை மூலமாகவும், போலி திட்டங்கள் மூலமாகவும் கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கியில் டெபாசிட் வைக்கத் தொடங்கியுள்ளனர். சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தில் மற்ற நாடுகளின் மொத்த கறுப்பு பணத்தைவிட இந்தியாவின் கறுப்புப் பணம் அதிகம். மொத்தம் 2000 இந்தியர்களின் பெயர்களில் கறுப்புப் பணம் அங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அவர்களில் டாப் லிஸ்ட் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன.
 
புதிய தாராளக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு கார்ப்பரேட் நிறுனவங்கள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி புதிய ரூட்டில் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கின்றன. பொய்யான வரவு செலவு கணக்குகளைக் காட்டி ஹவாலா வர்த்தகத்தின் மூலம் அவற்றை வெளிநாட்டில் பதுக்குவது; மூலப் பொருட்களின் விலைகளை அதிகரித்துக் காட்டுவது; அதிகபட்ச செலவு செய்ததாக கணக்கு காட்டுவது; உயர் அதிகாரிகளுக்கு ஏராளமான சம்பளம் வழங்குவது; காண்டிராக்ட் முறையில் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி கொடுப்பது, போனஸ் தர மறுப்பது போன்ற உழைப்புச் சுரண்டல் மூலமும்; 2ஜி அலைக்கற்றை 1.76 லட்சம் கோடி, காமன்வெல்த் விளையாட்டு 70 ஆயிரம் கோடி, ஸ்டாம்ப் ஊழல் 20 ஆயிரம் கோடி, சத்தியம் ஊழல் 14 ஆயிரம் கோடி, கால்நடை தீவன ஊழல் 900 கோடி போன்ற மாபெரும் ஊழல் பணமும் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ளன. அப்படிப் பார்க்கும் போது உலக அரங்கில் இந்தியா வாங்கியிருக்கும் கடனை விட இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் பல மடங்கு அதிகம். அதை கைப்பற்றினாலே அந்நியக் கடன் ஒழியும். இந்தியா பூலோக சொர்க்கமாக மாறும். (தகவல் ஜூனியர் விகடன்).
 

கறுப்புப் பண காவலன் மோடி
 
பாராளுமன்ற தேர்தலின்போது வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை கைப்பற்றி வீட்டுக்கு ரூ.15 லட்சம் தருவேன் என்று மோடி வாக்குறுதியளிதார். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு காங்கிரஸ் கட்சியை போலவே கறுப்பு பணத்தை கைப்பற்ற மறுக்கிறார். சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப்பண தகவல்கள், பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் அரசுக்குக் கிடைத்தும் அவற்றைக் கொண்டு கறுப்புப் பணத்தை மீட்க எந்த நடவடிக்கையும் மோடி அரசு எடுக்கவில்லை. எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த பதுக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை ஜெர்மனி கொடுக்கத் தயாராக இருந்தும் அந்தப் பட்டியலை பெற மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பா.ஜ.க-வை சேர்ந்த ராம்ஜேத் மலானி எம்.பி.யே குற்றம் சுமத்துகிறார். இவ்வாறு கறுப்பு பண திமிங்கிலங்களுக்கு காவல் இருக்கும் மோடி தன் உயிர் போனாலும் கறுப்பு பணத்தை ஒழிப்பேன் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். மோடி தியாகி வேடம் போடுவது நாட்டுமக்களை ஏமாற்றத்தான். அத்துடன் மக்களின் எதிர்ப்புகள், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்புகளுக்குப் பின்பு கூட தனது அறிவிப்பை திரும்பப் பெற மோடி தயாரில்லை. மாறாக எதேச்சதிகார பாதையில் எமர்ஜென்சியை நோக்கி நாட்டை தள்ளுகிறார்.
 
கறுப்புப் பணத்தை ஒழிக்க வழி
 
கறுப்புப் பணத்தை கைப்பற்ற வேண்டுமானால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளும், தரகுமுதலாளித்துவ அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினரும் குவித்து வைத்துள்ளவர்களின் பட்டியலை வெளியிட்டு அவற்றைக் கைப்பற்ற வேண்டும்.
 
மாபெரும் ஊழலுக்கும், பதுக்கலுக்கும் காரணமான புதிய தாராளக் கொள்கைகளை ஒழிக்க வேண்டும். அவ்வாறு வெளிநாடுகளில் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை கைப்பற்றுவது சுலபமல்ல. மாறாக அவர்களின் சொத்துக்களை கைப்பற்றி அரசுடைமை ஆக்குவது ஒன்றுதான் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கான ஒரே வழியாகும்.
 
அதனை இன்றைய இந்திய அரசும், அரசமைப்பு முறையும் ஒருகாலும் செயல்படுத்தாது. புரட்சியின் மூலம் அமையும் புதிய ஜனநாயக அரசுதான் அதனை சாதிக்கும்.
 
எனவே புதிய தாராளக் கொள்கைகளை எதிர்த்தும், கறுப்புப்பண திமிங்கிலங்களின் சொத்துக்களை கைப்பற்றி அரசுடைமையாக்கவும், கறுப்புப்பண காவலன் மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றவும் கோருகின்ற அனைவரும் பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கிறோம்.
 

*மோடி அரசே! மக்களை வதைக்கும் கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் - 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!
 
* சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்துள்ள முதலாளிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடு! அவர்களின் உடைமைகளை அரசுடைமையாக்கு!
 
* உள்நாட்டில், பங்குச்சந்தைச் சூதாடிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், தரகு முதலாளித்துவ அரசியல் வாதிகள், அதிகாரிகளின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்று!
 
* கறுப்புப் பணக் காவலன் மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்றுவோம்!
 
* எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டுவர முயலும் மோடி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
 

 

Wednesday, 16 November 2016

மோடி அரசே, கறுப்புப் பணத்தை பாதுகாக்கும் நோட்டுத் தடை உத்தரவை ரத்துச் செய்!

 
 
மோடி அரசே!
மக்களை வதைக்கும்  கறுப்புப் பணத்தைப் பாதுகாக்கும் –
500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பை ரத்து செய்!

 * ஸ்விஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை பதுக்கிவைத்துள்ள
 முதலாளிகளின் பெயர்ப்பட்டியலை வெளியிடு!
அவர்களின் உடைமைகளை அரசுடைமையாக்கு!
 
 * உள்நாட்டில், பங்குச் சந்தைச் சூதாடிகள், ரியல் எஸ்டேட் கொள்ளையர்கள், தரகு முதலாளித்துவ அரசியல் வாதிகள்,
அதிகாரிகளின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்று!
 
 * கறுப்புப் பணக் காவலன் மோடியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம்!
 
 * எமர்ஜென்சி ஆட்சியைக் கொண்டுவர முயலும் மோடி கும்பலின் சதிகளை முறியடிப்போம்!
 
நவம்பர்                                                                                2016