Thursday 10 May 2012

ம.ஜ.இ.க வின் மே நாள் பிரச்சாரக் காட்சிகள்




மே நாள் 2012 இல் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் (ம.ஜ.இ.க) தமிழ்நாடு தர்மபுரி,நெல்லிகுப்பம், பூந்தமல்லி ஆகிய மையங்களில் நடத்திய ஆர்ப்பாட்டம்,பொதுக்கூட்டம்,மற்றும் ஊர்வலங்களின் புகைப்படத்தொகுப்பு.



 
* மரணப்படுக்கையிலிருக்கும் முதலாளித்துவத்தைக் காப்பாற்ற உலக மக்களை பலிகொடுக்கும் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்துப் போராடுவோம்!


* சரிந்துகொண்டிருக்கும் ஏகாதிபத்திய மூலதனத்திற்கு தோள்கொடுக்கும் மன்மோகன் கும்பல், புதிய காலனியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை தீவிரப்படுத்துவதை முறியடிப்போம்!


* புதிய பொருளாதாரக் கொள்கைகளால் ஆழப்படும் தமிழகப் பொருளாதார நெருக்கடிகளை - கருணாநிதி மீது பழிபோட்டு - தமிழக மக்கள் மீது சுமத்தும் ஜெயா ஆட்சியை எதிர்ப்போம்!


* ஊழல் மலிந்த ஆட்சியைப் பாதுகாக்கவும் மக்கள் விரோதக் கொள்கைகளைத் தொடர்வதற்காகவும் ஜெயா பின்பற்றும் பாசிசக் கொள்கைகளை முறியடிப்போம்!


* ஜெயா அரசு மக்கள் மீது சுமத்தியுள்ள கட்டண உயர்வு, விலை உயர்வு, வரிச்சுமைகளைத் திரும்பப் பெறப் போராடுவோம்!


* ஜெயா அரசின் சாதிவெறிப் பாசிச தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்துப் போராடுவோம்!

* பன்னாட்டுக் கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்காக தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் மன்மோகன் கும்பலின் ஆட்சியை எதிர்த்துப் போராடுவோம்!


* தொழிலாளர்களின் தொழிற்சங்க, ஜனநாயக, அரசியல் உரிமைகளுக்காகப் போராடுவோம்!

* விவசாயிகளை தற்கொலைக்கும், பட்டினிச் சாவுக்கும் தள்ளிவிடும் இந்திய அரசின் புதிய காலனிய வேளாண் கொள்கைகளை முறியடிப்போம்!

* பன்னாட்டு, உள்நாட்டுப் பெருமுதலாளிகளின் கையில் நிலங்கள் குவிவதை எதிர்ப்போம்! நிலச்சீர்திருத்தற்காகப் போராடுவோம்!

* தண்ணீரைத் தனியார்மயமாக்கி தமிழகத்தை பாலைவனமாக்கும் மன்மோகன் கும்பலின் ‘தேசிய நீர்க்கொள்கையை’ முறியடிப்போம்!


 
* தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்!

* உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே, ஒன்றுபடுவோம்!

* மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்!


மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

மே  2012