Saturday 7 November 2015

ஜெயா அரசே! ம.க.இ.க. பாடகர் கோவன் மீதான தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெறு! உடனே விடுதலை செய்!

* 124A காலனியச் சட்டத்தைத் திரும்பப் பெறப் போராடுவோம்!

* தமிழகம் மதுவில் மூழ்கியிருப்பதற்கு அ.தி.மு.க. மட்டுமல்ல, தி.மு.க.-வும் பொறுப்பு!

* கொடுங்கோல் அரசை நடத்த மக்களைக் கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மூடு!

 * சசிகலா, டி.ஆர்.பாலு கும்பலின் சாராய ஆலைகளைப் பறிமுதல் செய்!

 *அந்நிய மதுபானங்களைத் தடை செய்! 
கள் இறக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கு!

 * மக்களின் நரக வாழ்க்கை தொடரும் வரை மதுப்பழக்கம் ஒழியாது!

 * இந்துத்துவப் பாசிசம் ஒழியாமல் நாட்டில் நாகரீக வாழ்வு மலராது!

 *திராவிடக் கட்சிகள் அனைத்தும், பா.ஜ.க. ஆட்சியில் அமரத் துணை போனவைகளே!

  * ம.க.இ.க.-வே, பார்ப்பன எதிர்ப்பு பேரால் “2G புகழ்” இராசா, கனிமொழி, மாறன் கும்பலுக்குப் பரிந்து பேசாதே!

  * மக்களின் வாழ்வு மலர, மதுப் பழக்கம் ஒழிய மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு    நவம்பர் 2015

6 comments:

  1. வறட்டு வாதம் பேசியே " புரட்சி நம் கையை விட்டு போனது .... இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே .........

    ReplyDelete

  2. உங்க அறிக்கை எல்லாம் சரி -
    இப்படி வறட்டு வாதம் பேசியே " புரட்சி நம் கையை விட்டு போனது .... இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே .........
    @மஜ இக
    >> எதிரிகளில் முதல் எதிரி என கணக்கிட்டு - அந்த எதிரியை எதார்த்த நிலையில் இருந்து , ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் "ஐக்கிய முன்னணி கட்டி - முதல் எதிரியை தீர்த்து கட்டவேண்டும் !
    >> இவர்களின் வாதம் கடந்த 30 வருடங்களாகவே "கற்பனவாதமாகவே போனது ---
    >யதார்த்தத்துக்கும் இவர்களுக்கும் பெரிய மலை- மடுவு என இடைவெளி உண்டாகிவிட்டது
    >> அன்றைய நாளில் இவர்கள் பின்னால் திரண்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் - அறிவுஜீவிகள் - அதை பயன்படித்து கொள்ளாத வறட்டு வாதிகள்

    ReplyDelete
    Replies
    1. 12316 November 2015 at 16:17

      உங்க அறிக்கை எல்லாம் சரி -

      >> எதிரிகளில் முதல் எதிரி என கணக்கிட்டு - அந்த எதிரியை எதார்த்த நிலையில் இருந்து , ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் "ஐக்கிய முன்னணி கட்டி - முதல் எதிரியை தீர்த்து கட்டவேண்டும் ! சரியானதுதான். எதிரியை நீங்கள் எதன் அடிப்படையில் தீர்மானிக்கிறீர்கள்? பார்ப்பனர்களை ஆதரிப்பவர்கள் எல்லாம் மக்களின் எதிரிகள். பார்ப்பனர்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் மக்களின் நண்பர்கள் இதுதானே உங்களது கண்ணோட்டம் அதைத்தான் ம.ஜ.இ.க.விமர்சிக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் உலகை தனது புதியகாலனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிக்கு உலகில் எதிர்ப்பு வருகிறது அதனை ஒடுக்கிட உலகம் முழுவதிலும் பாசிச ஆட்சியை உருவாக்கிடுகிறார்கள். அந்தவகையிலேயே இங்கும் இந்துத்துவ பாசிசம் கட்டியமைக்கப்படுகிறது. இந்த பாசிசத்திற்கு ஊற்றுக்கன் அமெரிக்க புதியகாலனியாதிக்கம். இந்த எதிரியை ஒழிப்பதற்கான திட்டத்தில் அமெரிக்கர்களுக்கு எதிரான இரண்டாம்வகை எதிரிகளோடு ஒன்றினைவதைப்பற்றி சிந்திக்காமல் பார்ப்பன எதிர்ப்பு என்று பேசி புதியகாலனியத்திற்கு சேவைசெய்யும் தி.மு.க.வோடு கூட்டுசேர்ந்து அ.தி.மு.க.வை எதிர்ப்பது என்பது புதியகாலனியத்திற்கு சேவைசெய்வதாகும் என்பது எப்படி வறட்டுவாதம் ஆகும். இந்திய மக்களின் எதிரிகள் ஏகாதிபத்தியம் தற்போது குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம், தரகுமுதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம் என்று எதிரிகளை தெளிவாக வரையறுத்த மா.லெ. புரட்சியாளர்களின் கொள்கையை கைவிட்டுவிட்டு பார்ப்பன எதிர்ப்புபேசி உண்மையான எதிரிகளை மக்களுக்கு காட்டிடாமல் மறைப்பது சரியா?

      Delete
    2. 12316 November 2015 at 16:17

      உங்க அறிக்கை எல்லாம் சரி -
      இப்படி வறட்டு வாதம் பேசியே " புரட்சி நம் கையை விட்டு போனது .... இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே .........
      @மஜ இக
      >> எதிரிகளில் முதல் எதிரி என கணக்கிட்டு - அந்த எதிரியை எதார்த்த நிலையில் இருந்து , ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் "ஐக்கிய முன்னணி கட்டி - முதல் எதிரியை தீர்த்து கட்டவேண்டும் !
      >> இவர்களின் வாதம் கடந்த 30 வருடங்களாகவே "கற்பனவாதமாகவே போனது ---
      >யதார்த்தத்துக்கும் இவர்களுக்கும் பெரிய மலை- மடுவு என இடைவெளி உண்டாகிவிட்டது
      >> அன்றைய நாளில் இவர்கள் பின்னால் திரண்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் - அறிவுஜீவிகள் - அதை பயன்படித்து கொள்ளாத வறட்டு வாதிகள்

      >> இவர்களின் வாதம் கடந்த 30 வருடங்களாகவே "கற்பனவாதமாகவே போனது ---
      >யதார்த்தத்துக்கும் இவர்களுக்கும் பெரிய மலை- மடுவு என இடைவெளி உண்டாகிவிட்டது

      ம.ஜ.இ.க.வின் வாதம் கடந்த 30 ஆண்டுகளாக கற்பனாவாதமாக போய்விட்டது என்று குறிப்பிடும் இவர் எதைக்கொண்டு என்று விளக்கிடுவாரா?
      1990ஆம் ஆண்டுகளில் காட்-டங்கல் திட்டத்தில் நரசிம்மராவ் அரசாங்கம் கையெழுத்திட்டபோது அதனை எதிர்த்து முதன்முதலாக இயக்கம் கண்ட அமைப்பு ம.ஜ.இ.க. அப்போது ம.ஜ.இ.க. கொண்டுவந்த வெளியீட்டில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதுதான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கிறது. இந்தியநாடு முழுமையாக அடிமைநாடாக மாற்றப்படும் என்று அன்றே எச்சரித்த அமைப்பு .ம.ஜ.இ.க அமைப்பு. இந்த அமைப்ப்பைப் பார்த்து கற்பனாவாதிகள் என்று சொல்வது சரியா?
      யதார்த்தத்தை ம.ஜ.இ.க. புரிந்துகொள்ளவில்லை என்கிறார் எப்படி என்று விளக்குவாரா? இந்தியநாட்டு மக்களின் வாழ்வை சீரழித்தது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தலைமையில் கொண்டுவந்து நடைமுறையிலுள்ள தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற எதார்த்த உண்மையை மக்களிடம் எடுத்துச்சொல்லிவரும் அமைப்புத்தான் ம.ஜ.இ.க. என்ற அமைப்பு இதற்கு மாறாக மக்களின் பிரச்சனைகளுக்கெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கம்தான் என்று பல்லவி பாடுவதுதான் எதார்த்தமோ?

      Delete
    3. அன்றைய நாளில் இவர்கள் பின்னால் திரண்ட லட்சக்கணக்கான இளைஞர்கள் - அறிவுஜீவிகள் - அதை பயன்படித்து கொள்ளாத வறட்டு வாதிகள்
      ம.ஜ.இ.க.வின் பின்னால் பலர் திரண்டு இருந்தார்கள் அவர்களைப் பயன்படுத்தத் தெரியாத வறட்டுவாதிகள் என்கிறார். உண்மை என்ன? நேபாளத்தில் காட்மண்டுவைத்தவிர பிற இடங்களை கைப்பற்றிய நேபாள மாவோயிஸ்ட்டுகளின் நிலை இன்று என்ன? உலகம் முழுவதிலும் பொதுவுடமை இயக்கங்கள் பிளவுண்டு போகக் காரணம் என்ன? இதனை சிந்தித்து புரிந்துகொள்ள தவறுகின்றவர்கள்தான் இதுபோன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். இதற்க்குக் காரணம் கலைப்புவாதம் என்ற உண்மையை தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் அமைப்புத்தான் ம.ஜ.இ.க.ஆகும். இதனை புரிந்துகொள்ள தவறுகிறவர்களால் பிரச்சனையையும் புரிந்துகொள்ள முடியாது பிரச்சனைகளையும் தீர்க்க முடியாது. இந்த பிரச்சனை ம.ஜ.இ.க. மட்டும் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனை இல்லை. உலகிலுள்ள அனைத்து பொதுவுடமை இயக்கங்களும் சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனையாகும். கலைப்புவாதத்தை வீழ்த்தாமல் பொதுவுடமை இயக்கம் முன்னேறாது. பிரசண்டா கலைப்புவாதியாக மாறி கட்சியை கலைப்புவாத கட்சியாக மாற்றியதால்தான் அங்கு புரட்சி தோழ்வி கண்டது.

      Delete
  3. "எதிரிகளில் முதல் எதிரி என கணக்கிட்டு - அந்த எதிரியை எதார்த்த நிலையில் இருந்து , ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் அடிப்படையில் "ஐக்கிய முன்னணி கட்டி - முதல் எதிரியை தீர்த்து கட்டவேண்டும் !" - அந்த முதல் எதிரி யாா்? 'குறிப்பிட்ட திட்டம்' என்ன என்பன பற்றி விளக்கினால் நலமாக இருக்கும்.

    ReplyDelete