Monday 30 January 2017

மெரினா மாணவர் எழுச்சியை தேசிய விவசாய ஜனநாயக இயக்கமாக முன்னெடுப்போம்!

 
மாணவர் எழுச்சியை நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு,ஏகாதிபத்திய எதிர்ப்பு, விவசாய – தேசிய இயக்கமாக முன்னெடுப்போம்.

*மெரினா மாணவர் எழுச்சி ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல. மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்த அனைத்து மக்களின் போராட்டத்தின் தொகுப்பேயாகும்!

* ஜல்லிக்கட்டுக்கான மாணவர், இளைஞர் போராட்டம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தின் மூலம் வெற்றிப்பெற்றுள்ளது. அதற்காக தீரமாக
போராடிய மாணவர் , இளைஞர்களை பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம்!

*அதேசமயம், மாணவர்களின் எழுச்சியை அடக்கும் நோக்கத்துடன் மோடி அரசும், தமிழக அரசும் இறுதி கட்டத்தில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. இத்தகைய மக்கள் எழுச்சி இனி ஏற்படக் கூடாது
என்று திட்டமிட்டே காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தமிழக காவல் துறை தொடுத்துள்ளது. இத்தகைய அடக்குமுறைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

* தமிழக சட்டமன்றத்தின் சட்டத்திருத்தத்திற்குப் பிறகு ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தின் ஒரு கட்டம் முடிவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாகத் தடையை நீக்க மறுத்து மத்திய அரசோ,
உச்சநீதிமன்றமோ முடிவு செய்தால் மீண்டும் போராட்டம் நடத்துவோம்!

* ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழர் தேசிய பண்பாட்டுக்கான போராட்டம் என்று சொன்னால் போதாது. உண்மையில் தமிழர்களின் பொதுவான பண்பாட்டு இயக்கமாக ஜனநாயகப்படுத்த வேண்டும்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலவுடமை எதிர்ப்பு என மாணவர் எழுச்சியாக தொடர வேண்டும்!

* ஜல்லிக்கட்டு போன்ற நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் சாதி ஆதிக்கத்தில் உள்ள பண்பாட்டை ஒரு பொதுப் பண்பாடாக, அனைத்து சாதியினரையும் உள்ளடக்கிய, ஆணாதிக்கத்தை ஒழிக்கக் கூடிய ஜனநாயகப்
பண்பாடாக வளர்க்க போராடுவோம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்
 
ஜனவரி                                                                                                                               2017

No comments:

Post a Comment