Monday 4 September 2017

மருத்துவ மாணவி அனிதா படுகொலை: கழகம் கண்டன ஆர்ப்பாட்ட மறியல்!

மருத்துவ மாணவி அனிதா
மருத்துவ மாணவி அனிதா படுகொலை: கழகம் கண்டன ஆர்ப்பாட்ட மறியல்!

இந்திய மைய அரசு, மாநில அரசாங்களதும், சமூக நீதி ஆர்வலர்களதும்  பலத்த  கண்டனங்களைக் கணக்கில் எடுக்காமல் 2016 ஆம் ஆண்டு அமுலாக்கிய, The National Eligibility Entrance Test (NEET)[`தேசிய தகமை அனுமதித் தேர்வு`] விளைவாக, சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் மகளும்,, அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூக மாணவியுமான அனிதா, மருத்துவ மேற்படிப்புக்கான தகுதி பறிக்கப்பட்டதால் மன விரக்தி அடைந்து 04-09-2017 ஞாயிறு  மாலை அன்று தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.


அனிதா கழக ஆர்ப்பாட்டம்
 
 இப்படுகொலையைக் கண்டித்து, மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தின் தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தோழர் மாயக்கண்ணன் தலைமையில், தருமபுரி நான்குரோடு இலிருந்து தருமபுரி உள்ளுர் பேருந்து நிலையம் , வெளியூர் பேருந்து நிலையம் வரை இன்று காலை 10.30 யிலிருந்து 12.00 மணி வரை ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மறியல் என மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்லும் வகையில், ம.ஜ.இ.க வின் போராட்டம் நடைபெற்றது.


 
நீட்' தேர்வை திணித்து அனிதாவை படுகொலை செய்த மோடி ஆட்சியை எதிர்த்தும் , தமிழகத்திற்கு துரோகம் செய்யும் மோடியின் அடிவருடி எடப்பாடி கும்பலை ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தியும், சமூக நீதியை ஒழிக்கும், மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும், கார்ப்பேரேட்டுகளுக்கு சேவை செய்யும் நீட்` தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழக தோழர்கள் கண்டனம் முழங்கினர்.
















மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் வாழ்க,வாழ்க வாழ்கவே!
 
மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க,வெல்க வெல்கவே !!
ஆகஸ்ட்                                                                                  2017
 

No comments:

Post a Comment