Wednesday 22 February 2017

கிரிமினல் மாஃபியா சசிகலா கும்பலின் பொம்மை, எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிவோம்!

 
கிரிமினல் மாஃபியா சசிகலா கும்பலின், பொம்மை எடப்பாடி ஆட்சியை தூக்கி எறிவோம்!
 
* சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்களை பதவி விலகக்கோரி முற்றுகையிடுவோம்!
 
 * “A1 அம்மா” பெயரால் ஆட்சியமைக்க உரிமை கோரும் ஓ.பி.எஸ். கும்பலை ஆதரிக்காதீர்!
 
 * A1, A2 கிரிமினல் கும்பல்களுடன் சமரசம் செய்துகொள்ளும் திருத்தல்வாத, முதலாளித்துவ கட்சிகளை புறக்கணியுங்கள்!
 
* தமிழக ஆளும் கும்பல்களுக்கு இடையிலான மோதலில் ஆதாயம் தேடும் இந்துத்துவ பா.ஜ.க.வின் சதிகளை முறியடிப்போம்!
 
* தேர்ந்தெடுக்கவும் திருப்பியழைக்கவும் உரிமையுள்ள மக்கள் ஜனநாயக அரசமைக்க அணிதிரள்வோம்!
 
* ஊழல் மாஃபியா ஆட்சியை ஒழிக்க மக்கள் ஜனநாயக முன்னணி அமைப்போம்!

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு

Sunday 12 February 2017

நிதி நிலை அறிக்கை; கழக கண்டன ஆர்ப்பாட்டக் காட்சிகள்


மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதி நிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!
 
 


மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதி நிலை அறிக்கையை எதிர்த்தும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்தும் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் வள்ளுவர் கோட்டத்தில் 11.02.2017 மாலை 4.00 மணி தொடங்கிய ஆர்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தோழர் ஞானம் ம.ஜ.இ.க மாநில அமைப்பாளர் தலைமை தாங்கினார். தோழர் மனோகரன் ம.ஜ.இ.க ,தோழர்  கிருஷ்ணன் ம.ஜ.இ.க ,தோழர் பழனி மஜ.இ.க தோழர்கள் கீழ்கன்ட முழக்கத்தின் அடிப்படையில் கண்டன உரையாற்றினார்






 

Monday 6 February 2017

நிதி நிலை அறிக்கை 2017-18, கழக முழக்கமும் கண்டன ஆர்ப்பாட்டமும்

 
மோடி கும்பலின் தேசவிரோத, மக்கள் விரோத நிதி நிலை அறிக்கையை எதிர்த்துப் போராடுவோம்!
 
* 2017-18 நிதிநிலை அறிக்கை அந்நிய முதலீட்டு, மேம்பாட்டு வாரியத்தை கலைப்பதால் , அந்நிய மூலதனத்திற்கும், புதிய காலனியாதிக்கத்திற்கும்  தடைகள் அகற்றப்பட்டு நாடு புதிய காலனியாதிக்கத்திற்க்கும் தடைகள் அகற்றப்பட்டு, நாடு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது!
 
* பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு சேவை செய்வதே நிதிநிலை அறிக்கை .
 
* மக்கள் மீது சுமைகளை சுமத்துகிறது. விவசாயிகள் தற்கொலை சில்லறை வணிகம் சிறுதொழில் அழிவுக்கு தீர்வு இல்லை!
 
* பண மதிப்பு நீக்கத்தால் தொழில்கள் முடக்கம் . வேலையின்மை பெருக்கம்!
 
* தீவிர வலதுசாரி பொருளாதார நடவடிக்கையை மேற்கொண்டு, இந்து மதவாத பாசிச சம்மட்டியால் மக்களை தாக்கும் மோடி ஆட்சியை எதிர்த்து அணி திரள்வோம்!
 


 
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு
                                                   
                           பெப்ரவரி                                                                                       2017